பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த ஜெயினுல் ஆபிதீனுக்கு கண்டனம்

Must read

நெட்டிசன்:
வல்லம் பசீர் (Vallam Basheer ) அவர்களின் முகநூல் பதிவு:
“பிரச்சனைகளை கருத்தியலால் எதிர்கொள்வது தான் முறையே தவிர தனிமனித விமர்சனம் ஏற்புடையது அல்ல.

மோடி - ஜெயினுல் ஆபிதீன்
மோடி – ஜெயினுல் ஆபிதீன்

பிரதமர் மோடியின் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் எதிர்த்து வரும் சூழலில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பு நேற்று ஒரு கண்டன கூட்டத்தை நடத்தயது . அதில் பேசிய பி.ஜெயினுல்ஆபிதீன் மோடியை ஒன்பது என்றும் , ஏகவசனங்களிலும் தனி மனித தாக்குதலில் ஈடுபட்டார் .
விஸ்வரூபம் பட விவகாரத்திலும் இதே போன்று தான் நடிகர் கமலஹாசனை மகளோடு படுத்துக்கொள்வாயா என்றெல்லாம்அருவருக்கதக்க விதத்தில் வசைபாடினார் . தொடர்ந்து இதே போன்ற செயலில் ஈடுபட்டு வரும் ஜெய்னுல்ஆபிதீன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் .
ஒரு அமைப்பிற்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.”

More articles

Latest article