“செல்லாது” அறிவிப்பால் நெல் கொள்முதல் இல்லை! விவசாயிகள் போராட்டம்!

Must read

திருவண்ணாமலை:
டந்த 8ம் தேதி, திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் பண நோட்டு தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
இதன் விளைவாக  சிறு, குறு தொழில்களும் விவசாயமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
திருவண்ணாமலை  மாவட்டம்  ஆரணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம்  நெல் கொள்முதல் செய்ய முடியாது என கூறப்பட்டது. அப்படியே கொள்முதல் செய்தாலும்  பழைய  500 1000 ருபாய் நோட்டுகள்தான் –  அதுவும் ஒரு வாரம் கழித்துதான் – தரப்படும் என்று சொல்லப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதனால் விரக்தி அடைந்த இரு நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆரணி –  வந்தவாசி நெடுஞ்சாலையில்  சாலை மறியல் செய்தனர்.  இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி  டி.எஸ்.பி. (பொறுப்பு) பழனி, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
 

More articles

Latest article