பிரபல அமெரிக்க இளம் நடிகை ரோனி ஹாக் அதிரடி கைது….!

Must read

ரேச்சல் டையஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் அமெரிக்க இளம் நடிகை ரோனி ஹாக்.

இந்நிலையில் ரோனி ஹேக் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக ரோனி ஹேக் காதலர் காவல்துறையினருக்கு ஃபோன் செய்துள்ளார் . இதை தொடர்ந்து 20 வயதே ஆகும் ரோனி ஹாக்கை காவல்துறையினரால் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீஸ் விசாரணை செய்த போது அவரது காதலரின் உடலில் காயங்கள் இருந்துள்ளது.இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், ரோனி ஹாக்கை கைது செய்துள்ளனர்.

1 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்தி அவர் பெயிலில் வெளியில் வந்துள்ளார். அவர் வருகின்ற டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article