சென்னை:

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி ஆட்சியைக் கலைக்கவே ஸ்டாலின் போராட்டம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  என்றும், காவிரி விவகாரத்தில், ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார்  என்று கூறினார்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இன்றைய போராட்டம் போராட்டத்தால் தமிழகத்தில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் நடைபெற்ற போராட்டங்களால் சென்னை மாநகர் ஸ்தம்பித்தது, இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர் என்று கூறினார்.

மேலும், போராட்டத்தின்போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாக கூறியவர்  கல் எறியும் காலத்திலா திமுக உள்ளது? என்ற அவர், ஆதிமனிதர்கள் தான் கல்லை பயன்படுத்தினார்கள் திமுக ஆதி காலத்திற்கு திரும்பி விட்டதா?  என்று கேள்வி எழுப்பினார்.

சட்டமன்றத்தில்  பிரச்சினையை ஏற்படுத்தி ஆட்சியை கலைக்க முடியாததால் தற்போது ஸ்டாலின் காவிரி பிரச்சினையை கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

உண்ணாவிரதம் உள்ளிட்ட ஜனநாயக வழி போராட்டங்களுக்கு ஆதரவு உண்டு என்ற அவர், அவசர ஊர்திக்கூட செல்லமுடியாத அளவுக்கு திடீரென மறியல் செய்வது முறையல்ல என்றார்.

கமலின் நேற்றைய திருச்சி பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கமல் ஒரு அரசியல் அப்ரன்டிஸ் என்றும்,  அரசியலில் அப்பரண்டீஸாக உள்ள கமல்ஹாசன், இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்றும்,

நாங்கள் அரசியலில் ஹீரோவாக இருப்பதாக கூறியவர், கமல் ஒரு ஓய்வுபெற்ற ஹீரோ என்றும்   அரசியலில் ‘ஏ’ வில் உள்ள கமல்ஹாசன் ‘பி’ க்கு வர பல காலமாகும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.