எனக்கு ‘அய்யாதுரை’ என பெயர் வைப்பதாக இருந்த‌து: முதல்வர் ஸ்டாலின்

Must read

சென்னை:
னக்கு அய்யாதுரை என்ற பெயர் வைப்பதாக இருந்தது என்றும் ஆனால் ஸ்டாலின் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கூறினார்.

தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்

இந்த நிலையில் அவர் இந்த திருமண விழாவின் போது பேசிய போது முதல்வர் ஸ்டாலின், ‘ எனக்கு தனது தந்தை கருணாநிதி அவர்கள் அய்யாதுரை என்ற பெயர் வைப்பதாக தான் இருந்தது. ஆனால் ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் என்பவர் அன்றைய தினம் இறந்ததால் அந்த பெயரை எனக்கு சூட்டினார் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அந்த கேள்வி பதிலாக இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பேச்சு அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

More articles

Latest article