தானே சட்டையை கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்?

Must read

நெட்டிசன்:

இன்று சட்டசபையில் நடந்த அமளியைத் தொடர்ந்து, சபைக்குள் காவலர்கள் அழைக்கப்பட்டு, தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர். அப்போது தனது  காவலர்கள், அடித்து உதைத்து மிதித்ததாகவும், தனது சட்டையையும் கிழித்துவிட்டதாகவும் புகார் கூறினார் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்த சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள். அவர்கள் சொல்வது இத்துதான்:

“சபையைவிட்டு வெளியே வந்து தனது சட்டை கிழிக்கப்பட்டதாக  செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டி அளிக்கும்போது அவரது சட்டை கிழிக்கப்படவில்லை. இதை அவரது சட்டை பையை பார்த்தாலே தெரியும். கிழியாத அந்த பையில் பேனாவும் இருக்கிறது.

ஆனால் சிறிது நேரத்தில் அவரது சட்டைப்பை கிழிந்து தொங்குகிறது.

இது எப்படி?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினயை ஏற்படுத்தவே இப்படி தானே சட்டையை கிழித்துக்கொண்டார்!” என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

More articles

Latest article