பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

Must read

சென்னை:
பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்துக்கு முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article