மும்பை

ர்ச்சைக்குரிய பத்மாவத் இந்தித் திரைப்படத்தை ஆன்மிக தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பார்த்து பாராட்டி உள்ளார்.

இந்தித் திரைப்படமான பத்மவத் ராஜஸ்தான் அரசி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படமாக்கப் பட்டுள்ளது.    இந்தப் படம் தணிக்கைக்கு முன்பே இந்து மத அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.   தலைப்பு மற்றும் காட்சிகள் உட்பட ஒரு சில மாறுதல்களுக்குப் பின் இந்தப் படம் தணிக்கையாகி வரும் 26 ஆம் தேதி திரையிடப் பட உள்ளது.

இந்தியா முழுவதும் இதுவரை 5 மாநிலங்களில் இந்தத் திரைப்படம் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.   கோவாவில் காவல்துறையினர் ஏதும் அசம்பாவிதம் நேரிடலாம் எனக் கூறி படத்தை வெளியிட தடை விதிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குருஜி என தன் ஆதரவாளர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஆன்மிக தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு இந்த பத்மாவத் திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டுள்ளது.   இதை பார்த்த அவர் இந்த படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.  மேலும் இந்தப் படத்தில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.