மும்பை :

மும்பை பங்­குச் சந்­தை­யின் வர்த்தம் சென்செக்ஸ் குறியீடு 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று முதன்­மு­றை­யாக 35000 புள்ளிகண் தாண்டி வர்த்தம் இன்றும் தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது.

அதுபோல தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 19,900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2ம் நாளாக புதிய உச்சத்தில் வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 347 புள்ளிகள் உயர்ந்து 35,429 என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து, 10,865 என்ற நிலையிலும் வர்த்தகம் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பங்குசந்தை 34000 புள்ளிகளை எட்டியிருந்தது. இது படிப்படியாக அதிகரித்து கடந்த 15 நாட்களில் 1000 புள்ளிகள் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

நேற்று மாலை  வர்த்­த­கத்­தின் இறு­தி­யின்போது மும்பை பங்கு சந்தையின் , சென்­செக்ஸ் 35,081 புள்­ளி­களில் நிலை கொண்­டது. நிப்டி 10,788 புள்­ளி­களில் நிலை பெற்­றது.

இந்நிலையில், இன்று காலை தொடங்கிய பங்கு வர்த்தம் மேலும் உயர்ந்த நிலையிலேயே வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

பங்கு வர்த்தகம் உயர்வுக்கு காரணமாக, வங்கி வர்த்தம், மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டின் வங்கிகளில் பெரிய பங்குகளை வைத்திருப்பதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக    வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) / வெளிநாட்டு வர்த்தக முதலீட்டாளர்கள் (FPIs) கடந்த சில தினங்களாக  இந்திய பங்குகளை வாங்கி வருவதாலும் உயர்ந்ததாக கூறப்படுகிறது.

மேலும்,  டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற கார்பரேட் நிறுவணங்களின் காலாண்டு வருவாய் குறித்த அறிவிப்பு போன்றவற்றால் பங்கு வர்த்தகம் இந்த ஆண்டு தொடக்கம் முதலே உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.