கண்டி: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழந்து 469 ரன்களை குவித்துள்ளது.

டாஸ் வென்ற இலங்கை, முதலில் களமிறங்கியது. கருணரத்னே 118 ரன்களும், லஹிரு 140 ரன்களும் அடித்தனர். ஒஷாடா பெர்ணான்டோ 81 ரன்கள் அடித்து அவுட்டானார். தற்போது, டிக்வெல்லா 64 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன், ரமேஷ் மெண்டிஸ் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

மூன்றாவது நாள் ஆட்டத்தில், வங்கதேசம், இலங்கையின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை விரைவாக எடுக்காத பட்சத்தில், இலங்கை அணி டிக்ளேர் செய்யலாம்.

அதேசமயம், தனது முதல் இன்னிங்ஸில், வங்கதேசமும் ரன்கள் குவிக்கும் பட்சத்தில், இந்தப் போட்டியும் டிராவிலேயே முடிவடையும் வாய்ப்புகள்தான் அதிகம்.