180 ரன்கள் என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி விரட்டும் பெங்களூரு அணி, 14 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை இழந்து, 84 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

வெற்றி பெறுவதற்கு, எஞ்சியுள்ள 36 பந்துகளில், 96 ரன்களை எடுத்தாக வேண்டிய கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கைவசம் 6 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மென்கள் அனைவருமே அணியைக் கைவிட்டுவிட்டனர். கேப்டன் கோலி, 34 பந்துகளில் அடித்தது என்னவோ 35 ரன்கள்தான். தேவ்தத் 7 ரன்களுக்கு காலியானார்.

கிளென் மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். டி வில்லியர்ஸ் 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடக்கம் முதல் அதிரடி காட்டிவந்த பெங்களூரு அணி, தற்போது தடுமாற தொடங்கியுள்ளது.