அகமதாபாத்: பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் முதல் லீக் போட்டியில், பெங்களூரு அணியின் வெற்றிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பஞ்சாப் அணி.

டாஸ் வென்றதும் முதலில் பெளலிங் தேர்வுசெய்தது பெங்களூரு அணி. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி துவக்கத்தில் அதிரடி காட்டியது. அந்த அணியில் அகர்வால் இடம்பெறவில்லை. பதிலாக பிரப்சிம்ரான் சிங் இடம்பெற்றார். அவர் எடுத்தது வெறும் 7 ரன்களே.

கேப்டன் ராகுல், 57 பந்துகளில், 5 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் அடித்து இறுதிவரை நாட்அவுட்டாக இருந்தார்.

கிறிஸ் கெய்ல் 24 பந்துகளில் 46 ரன்களை அடிக்க, பூரான் டக்அவுட். அவர், இத்தொடர் முழுவதுமே சொதப்புகிறார். ஹர்பிரீத் பிரார் 17 பந்துகளில் 25 ரன்களை அடிக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை சேர்த்தது பஞ்சாப் அணி.