அகமதாபாத்: பெங்களூரு அணிக்கெதிரான முதல் லீக் போட்டியை, 34 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது பஞ்சாப் அணி.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 179 ரன்களைக் குவித்தது. பின்னர், 180 ரன்கள் என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியது பெங்களூரு.

ஆனால், அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மென்கள் மோசமாக சொதப்பினர். ரஜாத் பட்டிடார் 30 பந்துகளில் 31 ரன்களை அடித்தது எந்தவித பயனையும் அளிக்கவில்லை.

கைல் ஜேமிஸன் 11 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே அடிக்க, பெளலர் ஹர்ஷல் படேல், 13 பந்துகளில் 31 ரன்களை விளாசி, கடைசிநேர அதிரடி காட்டினார். ஆனால், பந்துகள் மிகவும் குறைவாகவே இருந்ததால், அவரின் அதிரடியும் எந்த நன்மையையும் அளிக்கவில்லை.

அதேசமயம், கூடுதலா அந்த அணிக்கு 11 ரன்கள் கிடைத்தன. இறுதியில், 20 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே சேர்த்து, 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது பெங்களூரு. இது அந்த அணியின் இரண்டாவது தோல்வியாகும்.

பஞ்சாப் தரப்பில், ஹர்பிரித் பிரார், 4 ஓவர்களில், 19 ரன்கள் மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகள் சாய்த்தார். 1 ஓவர் மெய்டன் ஓவர். ரவி பிஷ்னாய் 4 ஓவர்களில், 17 ரன்களை மட்டுமே கொடுத்து, 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.