a

கொழும்பு:
லங்கை  அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி.பியசேன இன்று கொழும்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
2010 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பியசேன,  நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இணைந்தார். அப்போது (கடந்த  ஆட்சி காலத்தில்) ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி பியசேனவுக்கும் வழங்கப்பட்டது.
.2015ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தற்போது அவர் எம்.பியாக இல்லை என்பதால் வாகனத்தை திரும்ப ஒப்படைக்குமாறு  அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பியசேன, வாகனத்தை ஒப்படைக்கவில்லை.
கொழும்பு கொள்ளுபிட்டியில் காவல்துறையினரால் நேற்று வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பியசேன விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.