ராய்பூர்:
த்திஷ்கர் மாநிலத்தில் போலீசார் சோதனையின்போது 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.
நக்சலைட்டுகள் அதிகம் காணப்படும் மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம், மாகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள் காடுகளில் மறைந்து வாழ்கின்றனர். குறிப்பாக சத்திஷ்கர், ஜார்கன்ட் மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம்.
இந்த மாநிலங்களில் நக்சலைட்டுகளின் கொட்டத்தை ஒடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் உள்ள பகுதியாகும். இங்கு அடிக்கடி நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் துப்பாகி சண்டை நடைபெறும். நக்சலைட்டுகளை ஒழிக்க ◌மாநில போலீசாருடன், மத்திய பாதுகாப்பு படையும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
சம்பவத்தன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். சுக்மா மாவட்டம் பாஸ்கர் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான வெடிப்பொருட்களுடன் 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  வெடி பொருட்களை பார்த்து போலீசார் அதிர்ந்து நின்றனர். இவர்கள் பிடிபடாமல் இருந்திருந்தால் பெரும் நாசத்தை ஏற்படுத்தி இருப்பார்கள் என்றனர் போலீசார்.
பிடிபட்டவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.