பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள  நீலம் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
pOk
கடந்த ஜூலை 21 அன்று நடைபெற்ற தேர்தலில் பெருமளவில் வாக்காளர்களுக்கு பணமும், அதிகாரத்தை தவறாகப் பயனபடுத்தி ஆளும்கட்சிக்கு கள்ளவோட்டுகளும் பதிவுசெய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த மக்கள் வீதிக்கு வந்து போராடினர்.
நடைபெற்ற தேர்தலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வெற்றிபெற்றது.
மொத்தமுள்ள 41 தொகுதிகளில் 31 தொகுதிகளை ஆளும்கட்சி கைப்பற்றியது. முஸ்லிம் மாநாட்டு கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலா மூன்று இடங்களைக் கைப்பற்றியது.
மோசடியாய் பெற்ற இந்த தேர்தல் வெற்றியைக் கண்டித்து பாகிஸ்தான் கொடியை எரித்து போராடிய நீலம் பள்ளத்தாக்கு மக்களை போலிசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
போராட்டக்காரர்கள் தேர்தல் விளம்பரங்களில் கறுப்பு மை அடித்தும், வண்டி டயர்களை எரித்தும் , போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். போலிசாருடனும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
பெரும்பாலான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் உள்ள முசாஃபர்பாத் , கொட்லி, சினாரி, மிர்பூர் ஆகிய நகரங்களில் வன்முறை நடந்தது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியினர் ஒரு முஸ்லிம் மாநாட்டு கட்சி தொண்டரை கொன்றதால் கோபமடைந்த மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதி மக்கள் கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரில் எப்பொழுதும் ஆளும்கட்சி வெற்றிபெறும் வகையில் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இம்முறை  பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு வெற்றி  கிடைத்தது “