டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதிக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால், முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகளின் தேவைகளுக்காக மட்டும் ஸ்புட்னிக் தடுப்பபூசி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், சென்னை உள்பட 9 முக்கிய நகரங்களில் மட்டுமே இந்த தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை இந்திய அரசு இலவசமாக மக்களுக்கு செலுத்தி வருகிறது. இதையடுத்து வெளிநாடுகளைச் சேர்ந்த பல தடுப்பூசிகள் இந்திய பயன்பாட்டுக்கு அனுமதி கோரி காத்திருக்கின்றன. இதில், ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி  கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளத.

இதையடுத்து,  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், உள்நாட்டில் தயாரித்து விற்பனை செய்யவும் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டா டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக தடுப்பூசியை குறிப்பிட்ட அளவுக்கு இறக்குமதி செய்து, கடந்த மே 14ம் தேதி முதல் ஐதராபாத்தில் மட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

இந்த தடுப்பூசியான தற்போது, சென்னை, டெல்லி, விசாகப்பட்டினம், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, பட்டி (இமாச்சல்), கோலாப்பூர், மிர்யலகுடா (தெலுங்கானா) ஆகிய 9 நகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நகரங்களில் உள்ள  சில தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில நகரங்களுக்கும் தடுப்பூசியை விரைவு படுத்த ரெட்டீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரூ.948 விலையுடன், ஜிஎஸ்டியாக, ரூ.47 மற்றும் சேவைக் கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1,145-க்கு செலுத்த மத்தியஅரசு தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி  உள்ளது.

இந்த தடுப்பூசியானது சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனை அப்போலோவில் செலுத்தப்படுகிறது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 91.6 சதவீத செயல்திறன் கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த தடுப்பூசியை பொதுமக்கள் கோவின் இணையதளம் மூலம் பதிவு செய்து பயனடைய முடியாது. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளில் இதுதான் அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.