சென்னை: தமிழகத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது! எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 4 ஆண்டுகளுக்கு பிறகு 2026, மே மாதம் 15ந்தேதி பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக லிட்டருக்கு ரூ.3 உயர்ததப்பட்டது. இது பொதுமக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த நாட்களில் (மே 19ந்தேதி) மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமான அளவு உள்ளதாக, தமிழகம், புதுச்சேரி எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகம் சம்பந்தப்பட்ட கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நடைபெறுகிறது. எரிபொருள் விநியோகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நுகர்வோர்களின் எரிபொருள் தேவைக்கேற்ப அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் இருப்பு இருக்கிறது. எனவே, பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்டாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களுக்கு தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்வதை உறுதி செய்ய எண்ணெய் சந்தை நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]