டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

உலக நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா தொற்றை விரட்ட கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் – வி மருந்து முக்கிய ஒன்றாக மானதாக பார்க்கபப்டுகிறது. அந்நாட்டில் கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎப் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துள்ளது

இந் நிலையில் 3ம் கட்ட பரிசோதனையாக கடந்த ஆண்டு நவம்பரில் மாஸ்கோவில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிரிட்டிஷ் மருத்துவ இதழான தி லான் சர்ட் நடத்திய ஆய்வில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி 91.6% செயல்திறன் மிக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில்,  ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதிக்க கோரி டாக்டர் ரெட்டி ஆய்வகம் மததிய அரசின் மனு ஒன்றை அளித்தது. கொரோனாவை தடுப்பதில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி  செயல்திறன் மிக்கது என்றும் அதில் ரெட்டி ஆய்வகம் கூறி உள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.