டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த இயக்கம் மூலம் முன்கள பணியாளர்களுக்கு, மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

39வது நாளான நேற்று வரை நாடு முழுவதும் 1,19,07,392 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள தகவல்களின் படி, 1,61,840 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

இவர்களில் 98,382 பேருக்கு முதல் டோசும், 63,458 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். மகாராஷ்டிராவில் 42,319 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர். மத்திய பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களிலும்,  ஜம்முகாஷ்மீரிலும் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துமாறு சுகாதார அமைச்சகம் கேட்டு கொண்டுள்ளது.