டில்லி

த்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் பாஜகவில் இணைகிறார் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

சுமார் 77 வயதாகும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கமல்நாத். மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார் தற்போது இவரது மகன் நகுல் நாத், இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

தற்போது கமல்நாத் டில்லிக்குச் சென்றுள்ளார்.  இந்நிலையில் அவர் பா.ஜ.க.வில் சேர போகிறார் என தகவல்கள் வெளிவந்தன. தனது தந்தையுடன் நகுல் நாத்தும், பா.ஜ.க.வில் சேருவார் என யூகங்கள் வெளிவந்தன.

கமல்நாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் இது குறித்துக் கூறும்போது,

”கமல்நாத் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. ஆனால் கட்சியில் நடந்து வரும் விசயங்களால் அவர் மகிழ்ச்சியற்று இருக்கிறார். அவர் 5 தசாப்தங்களுக்கு முன் கட்சியில் சேரும்போது இருந்ததுபோன்று காங்கிரஸ் இல்லை என உணர்கிறார்.   

ஆனால் டில்லியில் அமித்ஷாவையோ அல்லது பிரதமர் மோடியையோ அவர் சந்திக்கவில்லை.  அதே வேளையில் மத்தியப் பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா போன்றோர், கமல்நாத் கட்சியில் சேர வரும்படி அழைக்கிறோம் எனக் கூறுகின்றனர்

எனத் தெரிவித்துள்ளது.

கமல்நாத் ஒருபுறம், மாநிலங்களவை இடம் கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறார் என்றும், கமல்நாத்துக்கு எதிராக ராகுல் காந்தி இருக்கிறார் என்றும் செய்திகள் வந்த வண்ணம்  உள்ளன.  டில்லியில் கமல்நாத்திடம், பா.ஜ.கவில் சேருவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்று ஏதேனும் இருக்குமென்றால், ஊடகத்திடம் முதலில் தெரிவிப்பேன் எனக் கூறி உள்ளார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி,

“கமல்நாத் இந்திரா காந்தியால், தனது 3-வது மகன் என அழைக்கப்பட்டவர் ஆவார்  அவர் பா.ஜ.க.வில் சேருவது பற்றிய யூகங்களை புறந்தள்ளியுள்ளார். இத்தகைய பேச்சுகள் அடிப்படையற்றவை, காங்கிரஸ் கட்சியை விட்டு இந்திரா காந்தியின் 3-வது மகன் வெளியேறுவாரா?”

என்று கேள்வி எழுப்பி உள்ளார்.