சென்னை: நவம்பர் மாதம் முதல் மதுரை – ராமேஸ்வரம் ரயில் உள்பட சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண் – 08496, புவனேஸ்வர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில், நவம்பர் 4 முதல் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 04.25, 05.15, 06.30, 06.38, இரவு 07.05, 07.45, 08.10, 08.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 04.15, 05.05, 05.55, 06.04, 06.35, இரவு 07.00, 07.25, 07.55 மணிக்கு புறப்படும் என  கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வண்டி எண் – 06655, மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில், நவம்பர் 4 முதல் மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையை இரவு 07.30, 07.42, 07.55, 08.10, 08.25, 08.47, 09.02, 09.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 07.15, 07.25, 07.40, 07.56, 08.10, 08.32, 08.52, 09.10 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் – 06730, புனலூர் – மதுரை சிறப்பு ரயில், நவம்பர் 1 முதல் விருதுநகரிலிருந்து அதிகாலை 03.15 மணிக்கு பதிலாக அதிகாலை 03.00 மணிக்கு புறப்படும்.

வண்டி எண் – 06101, சென்னை – கொல்லம் சிறப்பு ரயில், நவம்பர் 1 முதல் திண்டுக்கல், மதுரை ஆகிய நிலையங்களில் இருந்து முறையே நள்ளிரவு 11.40, 12.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நள்ளிரவு 11.05, 12.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06102 கொல்லம் – சென்னை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08.10 மணிக்கு பதிலாக இரவு 08.05 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.