சென்னை:

ணல் கடத்தல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக  தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கெடு விதித்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மணல் திருட்டுத் தனமாக கடத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மணல் கடத்தல் வழக்குகளில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில்  நடைபெற்று வந்தது.

அப்போது மணல் கடத்தல் தொடர்பாக உயர்நீதி மன்றம்  உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்று குற்றம் சாட்டிய நிதிபதி, 30 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு  வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்தது.