சென்னை:   தங்கத்தின் விலை நாளுக்கு உயர்ந்து விண்ணை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது. இன்று மேலும் உயர்ந்து  சவரன் தங்கம் விலை ரூ.64,480 ஆக உள்ளது. இது விரைவில் 70ஆயிரத்தை தொடும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480க்கும், ஒருகிராம் ரூ.8,060க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விற்பனையில்  முதல்முறையாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ஆயிரத்தை கடந்து சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையை பொறுத்தே தங்கத்தின் விலையும் ஏற்றம் இறக்கமுடன் காணப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் தங்கத்தின் விலை வரலாறு காணத்தை உச்சத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறது.  ஜனவரி மாதம் ரூ.60ஆயிரம் சரவன் இருந்த தங்கத்தின் விலை பிப்ரவரி பிறந்ததும், அதை தாண்டி பயணிக்கத் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 8ந்தேதி அன்று  சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.63,560-க்கு விற்பனையானது.  பின்னர்,  10ந்தேதி (திங்கள்கிழமை)  தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று  தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.80 உயர்ந்தும்,  சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து சவரன் ரூ. 64,480 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு கிராமம் தங்கர்ததின்  ரூ. 8060-க்கும் விற்பனையாகிறது.   இந்த விலை மேலும் உயரும் எனவும் கூறப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் வெள்ளி விலையில் தொடா்ந்து 6-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.