தென்னிந்திய நடிகர் சங்கம் பத்திரிக்கை செய்தி

Must read

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நாளை மாலை 5 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நினைவு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார்கள் இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் அவர்கள் கூறியதாவது :-
நடிகர் சங்கத்தின் மரகத மணியாக திகழந்த அம்மா என்று மக்கள் தங்கள் மனதில் வைத்து பூஜிக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய கலையுலக சகோதரி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நம்மை மீளா துயரில் நம்மை தவிக்கவிட்டு சென்று இருக்கிறார். அன்னாருடைய ஆத்மா சாந்தி அடையவும் , அவர்தன் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் பெருமைகளை பதிவுசெய்யவும் தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நினைவு அஞ்சலி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. கலைக்காகவும் , பொது பணிக்காகவும் தம் வாழ்வனைத்தும் அர்பணித்த அவ்வாத்மாவிற்கு அஞ்சலி செலுத்த நடிகர் சங்க உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாத நடிகர்கள் , திரையுலக ஜாம்பாவான்கள் என அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
-தென்னிந்திய நடிகர் சங்கம்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள்,

More articles

Latest article