தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாரான நாகார்ஜுனாவின் இளைய மகனான அகில் அக்கினேனியின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைப்பெற்றுள்ளது. அகில் அக்கினேனி ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அதற்கு நாகார்ஜூனாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சில தினங்களாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடியவிரைவில் அவர்களின் தரப்பிலிருந்து வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் யாருக்கும் அறிவிக்காமல் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுள்ளது இதை பார்த்த டோலிவுட் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அகில் அக்கினேனியின் வருங்கால மனைவியாக வருபவர் தெலுங்கு திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் ஸ்ரியா பூபால்,பெரும் தொழிலதிபர் ஜி.வி.கே ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் நாகார்ஜூனாவின் மூத்த மகனான நாக சைத்தன்யாவுக்கும் தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.