டில்லி

ந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்க மறு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைத் தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.  இதையொட்டி இந்திய, ரஷ்ய நிறுவனங்களின் கூட்டமைப்பு ரூ.40,000 கோடிக்கு ஒப்பந்தம் பெற்றது. அரசு நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) மற்றும் ரஷ்ய நிறுவனமான TMH குழுமம் (TMH Group) ஆகியவை அடங்கும். ஆயினும் கவுரவ பிரச்சனை காரணமாக இரு நிறுவனங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஏலம் எடுப்பதற்கு முன் இந்த நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, TMH குழுமத்தின் துணை நிறுவனமான Metrowagonmash (MWM) இந்த கூட்டமைப்பில் 70 சதவீத பங்குகளை வைத்திருக்கும். ரஷ்யாவின் ரயில் கட்டுப்பாட்டு உற்பத்தி நிறுவனமான LES ஐந்து சதவீத பங்குகளையும், RVNL 25 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும். எனக் கூறப்பட்டது

ஆனால் ரயில் விகாஸ் நிறுவனம் அதிக பங்குகளைப் பெற முயல்வதாக ரஷ்ய நிறுவனம் கூறுகிறது.   இது குறித்து  ரஷ்ய ரயில்கள் தயாரிப்பு நிறுவன அதிகாரி,  ரயில் விகாஸ் அதிக பங்குகளை எதிர்பார்க்கிறது என்று கூறி உள்ளார்.  இது இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறிய செயலாகும்.

இந்த ஒப்பந்தத்தை இனி திரும்பப் பெற முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் அரசு உயர் அதிகாரிகளிடம் நிறுவனம் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மறு ஒப்பந்தம் விரைவில் கோரப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.