டில்லி

பாஜக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்க வேண்டும் என விரும்புவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த மாதம 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே மூண்ட கலவரம் இன்னும் முடி வுக்கு வரவில்லை.  அவ்வப்போது மாநிலம் முழுவதும் நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன.  இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து ஏரா ளமானோர் காயமடைந்து உள்ளனர்  தவிர. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் உள் ளனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் நேற்று தனது டிவிட்டரில்

“மணிப்பூர் மாநிலம் 49 நாட்களாக எரிகிறது. பிரதமர் மோடி இது குறித்து ஒருவார்த்தை கூட கூறாமல், 50-வது நாளில் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்கிறார். மாநிலத்தில் நூற்றுக்கணக்கானோர் மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்திருக்கின்றனர். எண்ணற்ற தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மோசமாகி வருகிறது.

இந்த கலவரம் மிசோரமிலும் பரவ தொடங்கி உள்ளது. இதில் பிரதமரைத் தலையிட வலியுறுத்துவதற்காக அவரை சந்திக்கக் கடந்த பல நாட்களாக மணிப்பூர் தலைவர்கள் நேரம் கேட்டும் இன்னும் ஒதுக்கப்படவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் மக்களின் குரல் ஒவ்வொரு நாளும் புறக்கணிக்கப்படுவது,

இது மோடியும், பாஜகவும் மோதலை நீடிக்க விரும்புவதையே காட்டுகிறது.இதில் தீர்வு காண பாஜக விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. தன்னைத்தானே விஸ்வகுரு எனக் கூறிக்கொள்பவர், மணிப்பூரின் குரலுக்கு எப்போது செவிமடுப்பார்?

அவர் (பிரதமர் மோடி) எப்போது நாட்டுக்கு அமைதிக்கான எளிய அழைப்பு விடுப்பார்? அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்த மத்திய உள்துறை மந்திரி மற்றும் மணிப்பூர் முதல்-மந்திரியிடம் எப்போது அவர் கேள்வி எழுப்புவார்?

எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.