புவனேஸ்வர்

டிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியக் கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தற்போது ஒடிசாவில் சர்வதேச கால்பந்து அணிகள் கலந்து கொள்ளும் இண்டர் காண்டினெண்டர் கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.  இதன் இறுதிச் சுற்றில் இந்தியா  மற்றும் லெபனான் அணிகள் மோதின.

இந்த போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றது.  இந்த   இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து இறுதிச் சுற்றில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியில் இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 46-வது நிமிடத்திலும், லாலியன்ஷுவாலா ஷாங்க்டே 66-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.