சென்னை

சென்னையில் நடந்த திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை தலைமை தாங்கி துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார்…

மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே எம்.பி., மற்றும் ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சோனியா காந்தி தனது உரையில்,

”அன்று ராஜீவ்காந்தி கொண்டு வந்த இட ஒதுக்கீடுதான், இன்று நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் சட்டத்திற்கான முன்னெடுப்பாக அமைந்தது. இதைக் கொண்டுவரக் காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது. 

மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளைக் கொண்ட ஐக்கிய மு ற்போக்கு கூட்டணி அரசால் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் ஒரு கருத்தொற்றுமை உருவாகாத காரணத்தினால் அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இன்று அந்த சட்டம் நிறைவேறி இருக்கிறது என்றாலும் கூட அதற்கு நாம் ஏற்கனவே எடுத்த முயற்சிகளும், கொடுத்த அழுத்தங்களும் அதிகம். ஆனால் அந்த சட்டம் என்று அமல்படுத்தப்படும் என்ற ஒரு தெளிவே இல்லை. 

இந்தியா கூட்டணி என்பது, மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறைவேற்றியே தீரும். அதை நிறைவேற்றி ஒரு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தியே தீருவோம். இங்குக் கூடியுள்ள நாம் அதற்கான உறுதி எடுத்து, அதற்காக செயல்பட வேண்டும். இதை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் நிச்சயம் செய்யும். நாம் அனைவரும் போராடுவோம். இதனை அனைவரும் சேர்ந்து சாதிப்போம். நன்றியுடன் உழைப்போம். வெற்றி நமதே” 

என்று தெரிவித்துள்ளார்.