பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை: சோனியா காந்தி

Must read

புதுடில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாட மாட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. சோனியா காந்திக்கு 9 டிசம்பர் அன்று 73 வயதாகிறது.

பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு மனம் வருந்தும் இந்த சூழலில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன

உன்னாவில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்ததும், சமீபத்தில், ஹைதராபாத்தில்  ஒரு இளம் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தீயிட்டு கொலை செய்யப்பட்டதும் சோனியா காந்தி தனது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது  என்ற முடிவுக்கு வந்ததற்கான காரணமாகும்.

பெண்கள் மீதான தாக்குதல்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் தொடர்ந்து பதிவாகியுள்ளன, இந்த சம்பவங்கள் குறித்து மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்திக்குப் பின் மேலும் பல கொடூரங்கள் தற்போது நிகழ்ந்ததற்கான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

 

More articles

Latest article