டெல்லி:  டெல்லி தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜான்சிராணி சாலையில் அனாஜ் மன்டி என்ற இடத்தில் ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 43 பேர் தீயில் கருகி பலியாகினர்.

படுகாயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்த தகவலறிந்த முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், தீ விபத்து பகுதியை பார்வையிட்டார்.

எவ்வாறு விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ஒரு  லட்சம் நிதி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந் நிலையில், தீ எப்படி ஏற்பட்டது, எதனால் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.