சென்னை: தமிழகத்தில் இதுவரை 1200 கோடி மதிப்பிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவிலான, சுமார் 85 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசுப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், 2 லட்சம் வாக்காளர்கள் தபால் ஓட்டு செலுத்தியுள்ளனர் என தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் வரும் நாளை மறுதினம் (23 ஆம் தேதி) நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளுடன் தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் கூறியதாவது, ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் வெளிப்படைதன்மையுடன் அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தேர்தல் பணிகளும் அமைதியாக நடைபெற்று வருகின்றன.
தேர்தலின் போது பாதுகாப்பிற்காக 300 தனிப் படைகளை அமைத்துள்ளோம். அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்றார்.
அத்துடன், “இதுவரை 2 லட்சம் வாக்காளர்கள் தபால் ஓட்டு செலுத்தியுள்ளனர். தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படும்.
இதுவரை 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தேர்தல் பறக்கு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 5,938 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது வரை 95 சதவீதம் பூத் சிலீப் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]