காரைக்குடி: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.13.45 லட்சம் பணத்தை, அதிகாரிகளிடம் இருந்து கட்சியின் பறித்துச்சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகமும் ஜோராக நடைபெற்று வருகிறது. இதை தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது.
இந்த நிலையில், காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணம் பட்டுவாடா புகாரின் பேரிர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள கொட்டகையில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் ஒரு கட்டைப்பையில் பணம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், . அதை வாகனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் பணத்தை எண்ணி எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதன்படி வாகனத்தில் வைத்து பணத்தை எண்ணி உள்ளனர். அதில் ரூ.13.45 லட்சத்துக்கு மேல் இருந்துள்ளதாக தெரிகிறது.
பணத்தை எண்ணி முடித்து கட்டைப்பையில் வைத்தபோது திடீர் என கூட்டமாக வந்த நிர்வாகிகள் சிலர் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர். தவிர வாகனத்தின் சாவியையும் பறித்து தூக்கி எறிந்து விட்டு ஓடியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். தப்பியோடிய நபர்களை வீடியோ பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர். அலுவலக பணியாளர் பழனியப்பனை, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]