சுஷாந்த் கணக்கிலிருந்து ரூ 15 கோடி மாயமானது எப்படி? காதல் நடிகை ரியா மீது பகீர் குற்றச்சாட்டு..

Must read

ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி, காதலி ரியா உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
இதற்கிடையில் சுஷாந்த் தற்கொலைக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்று பாட்னா போலீசில் சுஷாந்த்தின் தந்தை புகார் அளித்திருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது:

சுஷாந்த் மும்பையிலிருந்து இடம் பெயர்ந்து கேரளாவில் உள்ள கூர்க்கிற்கு சென்று வாழ விரும்பினார் ரியாவை அழைத்தபோது மும்பையை விட்டு வர மறுத்திருக்கிறார். இதையடுத்து சுஷாந்தின் பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள், முக்கியமான ஆவணங்கள், லேப்டாப் மற்றும் மெடிக்கல் ரிப்போர்ட்களை ரியா எடுத்து சென்று விட்டார். சுஷாந்த்தின் போன் நம்பரை தனது செல்போனிலிருந்து நீக்கி இருக்கிறார்.
தனக்கு மனநலம் பாதிக்கப்படிருப்பதால் தனது எல்லா ஆவணங்களும் ரியாவிடம் இருக்கிறது இனிமேல் எனக்கு பட வாய்ப்புகள் வராது என்று பேட்டி அளிக்க சொல்லி சுஷாந்த்தை மிரட்டியி ருக்கிறார், இதனை சுஷாந்த் தனது சகோதரியிடம் ஒரு முறை தெரிவித்திருக்கிறார்.
ரியாவை சந்தித்த பிறகுதான் சுஷாந்த் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் அதுகுறித்து விசாரிக்க வேண்டும். சுஷாந்தை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற ரியா அங்கு அவருக்கு ஓவர் டோஸ் மாத்திரைகள் கொடுத்து போதைக்கு உட் படுத்தி இருக்கிறார். யாராவது கேட்டால் சுஷாந்திற்கு டெங்கு ஜூரம் வந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
சுஷாந்துக்கு புதிய படங்கள் வந்தால் அதில் தன்னை ஹீரோயினாக போட வற்புறுத்தி இருக்கிறார். இல்லாவிட்டால் அந்த படத்தை ஏற்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார். மேலும் சுஷாந்த்திடம் பணியாற்றிய பழைய ஆட்களை வேலைவிட்டு நீக்கிவிட்டு தனக்கு சுஷாந்த் பற்றிய தகவல் சொல்வ தற்கு வசதியாக தனக்கு தெரிந்த வேலை ஆட்களை சுஷாந்திடம் சேர்த்து விட்டிருக் கிறார். குடும்பத்தினருடன் பேசக்கூடாது, பாட்னா சென்று குடும்பத்தினரை சந்திக்க கூடாது என்றெல்லாம் தடை போட்டிருக் கிறார்.
2019 ம் இறுதிவரை சுஷாந்த் கணக்கில் ரூ .17 கோடி வைத்திருந்தார், ஆனால் சில மாதங்களில் ரூ .15 கோடி அவருக்கு சம்பந்தபடாதவர்களுக்கு டிரன்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறது. ரியா மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு சுஷாந்த் தந்தை கே.கே.சிங் புகாரில் கூறி உள்ளார்.
ரியா சக்ரபோர்த்தி மாடல் அழகியாக ஆவார். துனீகா துனீகா என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமானவர் பின்னர் இந்தியில் மேரே டாட் கி மாருதி, சோனாலி கேபில் போன்ற பல படங் களில் நடித்திருக்கிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

More articles

Latest article