டெல்லி: இந்தியாவில் இதுவரை  2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்த 858 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐசிஎம்ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த கொரோனா தொற்றால்  இதுவரை, 1,804,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38,161 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த கொரோனா வைரஸால், 52,783 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 758 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று (02/08/2020) ஞாயிற்றுக் கிழமை மட்டும் 3,81,027 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும்  இதுவரை 2,02,02,858 பேருக்கு கொ ரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது.