பீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு? பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்

Must read

சென்னை:

மிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய  பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தமிழக ஐஏஎஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவிய சமயத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்தவர் பீலா ராஜேஷ். கொரோனாவின் தாண்டவம்  அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பான தகவல்களை தினசரி செய்தியாளர்களை சந்தித்து, விளக்கியும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி வந்தார்.  எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி சொல்லிவிட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்முகத்துடன் பொறுமையாக பதிலளிப்பார். அது மட்டு மல்லாமல் கொரோனா குறித்து டிவிட்டரில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளிப்பார் அவரது சுறுசுறுப்பான நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றன.

கொரோனா விவகாரத்தில் அமைச்சர்களுக்கு இடையே முட்டல் மோதல் நீடித்து வந்த நிலையில், கொரோனா சோதனை உபகரணங்கள் வாங்குவதிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  இதில் பீலா ராஜேஷ் சமரசம் செய்ய மறுத்ததாகவும் தகவல்கள் பரவின. அதுபோல, சில விவகாரங்களில் அரசு கூறும் தகவல்களும், பீலா ராஜேஷ் கூறிய தகவல்களும் முரண்பட்டன.

அமைச்சர் வேலுமணி மீது சாட முடியாத விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ் மீது சாடுவது ஏன்?

இந்த நிலையில்தான், சில நாட்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திக்காமலும், அமைச்சரவை பணிகளை மேற்கொள்ளாமலும் சொந்த ஊருக்கு சென்று அமைதி காத்தார். இது தமிழக அமைச்சரவையில்  கடும் விமர்சனங்களை எழுப்பியது.

அந்த நேரத்திலும்,  தனி ஒரு ஆளாக நின்று கொரோனா தொற்று பணியில் சிறப்பாக  பணியாற்றியவர்  பீலா ராஜேஷ்.  இதனால் மத்திய சுகாதாரத்துறை, ஐசிஎம்ஆர் என அனைத்து தரப்பினரிடமும் பாராட்டு பெற்றார்.

இதனால், ஆட்சியாளர்களுக்கு பீலா ராஜேஷ் மீது எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து,  அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.  டாக்டர் பீலா ராஜேஷ் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டார். தற்போது அந்த பணியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், பீலாராஜேஷை அவமதிக்கும் வகையில் சிலர் அவர்மீது அவதூறுகளை வீசி வந்தனர். இது தொடர்பாக ஆட்சியார்களின் தூண்டுதலின்பேரில், பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார்கள் எழுப்பப்பட்டு, மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயலாற்றிய  பீலா ராஜேஷ்

இதைத்தொடர்ந்து, பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை, பீலா ராஜேஷ் மீதான சொத்து குவிப்பு புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இது தமிழக ஐஏஎஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்

More articles

Latest article