பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. தமிழில் வெளியான முதல் ஹிப் ஹாப் ஆல்பம், ‘ஹிப் ஹாப் தமிழன்’.

நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஸ்வின் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் ஆதி. சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஹிப்ஹாப் ஆதி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘சிவக்குமாரின் சபதம்’ என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை ஆதியே இயக்குகிறார். மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு, இவர் இயக்கும் இரண்டாவது படம்,

இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக மாதுரி ஜெயின் நடித்துள்ளார். அருண்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தீபக் எஸ்.துவாரகநாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சிவக்குமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.