சிவகார்த்திகேயன் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற “வேலைக்காரன்” திரைப்படத்தை இலவசமாக திரையிடப்போவதாக, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவாகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தை 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வெளிட்டது. இப்படம் பெரு வெற்றி பெற்றதோடு, தரமான படம் என்ற பாராட்டையும் பெற்றது. நாட்டில் நிலவும் உணவுப்பிரச்சினை குறித்து  எடுக்கப்பட்ட படம் இது.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம், “படத்தின் பெரு வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி. இத்திரைப்படம் உணவு பிரச்சினை பற்றி பேசியது. இப்படத்தின் கருத்துக்கள் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் பிப்ரவரி 1 முதல் 15ம் தேதி வரை இலவசமாக திரையிட திட்டமிட்டுள்ளோம் விருப்பமுள்ள பள்ளிகள் எங்களை அணுகினால், அப்பள்ளிகளுக்கு அருகில் உள்ள திரையரங்கில் இலவசமாக இப்படத்தை வெளியிடுவோம்” என்று அறிவித்துள்ளது.

24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ள.. அலைபேசி எண்கள்:

7010165044  9600045747

மின்னஞ்சல்: Velaikkaran.schools@24amstudios.com