பிரபல ஆர்ட் டைரக்டர் சுனில் பாபு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 50.

கலை இயக்குனர் சாபு சிரில் படங்களில் உதவியாளராக பணியை துவங்கிய சுனில் பாபு துப்பாக்கி, கஜினி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

பெங்களூரு நாட்கள், சீதா ராமம் ஆகிய படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய இவர் நேற்றிரவு திடீரென மரணமடைந்த செய்தி அறிந்து துல்கர் சல்மான் உள்ளிட்ட கலையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எம்.எஸ்.தோனி, பா உள்ளிட்ட பாலிவுட் படங்களுக்கும் பணியாற்றியுள்ள இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலமொழி படங்களில் பணியாற்றி வருகிறார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜயின் வாரிசு படத்தின் கலை இயக்குனரான இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.