என் கனவை நினைவாக்கினார் யுவன் ஷங்கர் ராஜா ; ப்ரித்வீ

Must read

டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸில் (தேசிய) முதல் ரன்னர்-அப் ஆக வெளிவந்த சென்னை டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் சீசன் 11 வின்னரான ப்ரித்வீ, அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறார் .

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் “அகலாதே” பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் பாடியுள்ளார். இதுவே அவர் அறிமுகப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது ஆறாம் வகுப்பில் இருந்தபோதே அவரின் இசை பயணத்தை தொடங்கியுள்ளார் .கர்நாடக இசை வகுப்புகளில் சேர்த்து பயின்ற அவர் அதற்கு பின் இரண்டு வருடங்கள் கலாக்ஷேத்திரத்தில் கிளாசிக்கல் இசையைப் படித்துள்ளார். அதன் பின் மேற்கத்திய இசை பாடங்களை எடுக்க அவர் அம்மாவின் அறிவுறுத்தலின் படி 3B யில் சேர்ந்துள்ளார் . பின்னர், பயிற்சிக்காக தி அகாடமி ஆஃப் மியூசிக் சென்று பயின்றுள்ளார். அதில் வெஸ்டர்ன் கான்டெம்பரரியில் க்ரேட் (Grade ) 8 ,மூன்றே ஆண்டுகளில் முடித்துள்ளார் .

திரைப்படப் பாடல்களின் கவர் வெர்ஷன்களை செய்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் . அதன் ரீதியில் யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களையும் கவர் வெர்ஷன் செய்துள்ளார். அவற்றை பல்வேறு இசையமைப்பாளர்களுக்கு அனுப்புவது அவர் வாடிக்கை.

இந்நிலையில் ஒரு நாள் யுவன் ஷங்கர் ராஜா இவருக்கு பதிலளித்துள்ளார் , “திரைப்படங்களில் பாடியிருக்கிறீர்களா” ? என்று. மேலும் ஒரு டெமோ கொடுக்க சொல்லியும் கூறியுள்ளார். தமிழில் படிக்க, பேச, எழுத பிருத்வீக்கு தெரிந்திருந்தாலும், தமிழ் பாடல்களைப் அவர் பாடியதில்லை. ஆனால் யுவன் அதை முயற்சித்துப் பார்க்கச் கூறியுள்ளார்.

யுவன் டியூன் கொடுக்க ப்ரித்வீ பாடலைப் பாடியுள்ளார் . இது அவரது முதல் பதிவு என்பதால் ‘ நான் பதட்டமாக இருந்தேன். ஆனால் யுவன் சார் தான் என்னை தெளிவாக்கினார் ,பிப்ரவரியில் பாடலைப் பதிவு செய்தேன். அப்போது எனக்கு எந்த விவரமும் தெரியாது. ஆனால் ஜூன் மாதத்தில் எனது குரல் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள் என்னால் நம்ப முடியவில்லை … அஜித் சாரின் படத்திற்காக பாடுவதை என்னால் நம்ப கூட முடியவில்லை , யுவன் சார் கூட பாடுவது என் கனவு , அது நிறைவேறிவிட்டது ‘ என குதூகலமாக உற்சாகத்தில் கூறினார் ப்ரித்வீ.

courtesy : Times Of India

More articles

Latest article