விஜய் சேதுபதியுடன் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் இணையும் பார்த்திபன்…!

Must read

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது சங்கத் தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் , கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .

More articles

Latest article