சென்னை:  சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவர்களின் மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியமன் இன்று  சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொற்று நோய் ஆய்வகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகஅரசு, கொரோனா தொற்று பரவலை மிகுந்த எச்சரிக்கையோடு தமிழ்நாடு அரசு கையாண்டு வருகிறது

கொரோனா வைரஸின் Omicron மாறுபாடு வேகமாகப் பரவி வரும் 11 ‘ஆபத்திலுள்ள’ நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்கள் கட்டாய பரிசோதனையைத் தொடங்கியுள்ளன. சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக் கப்படுகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்  தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் சென்னை மற்றும் பெங்களூருவுக்கு மரபணு வரிசைப்படுத்தலுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளன

அதுபோல  இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் ஆப் ப்ரிவென்டிவ் மெடிசின் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்; சென்னை மற்றும் பெங்களூருக்கு மரபணு வரிசைப்படுத்துவதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இவர்களின் முழுமையான பரிசோதனை முடிவு வரும் வரை ஒமிக்ரான் உறுதி என எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஓமைக்ரான் பாதிப்பு குறித்து மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை, அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது சமூக வலைத் தளங்களில் பதிவு செய்பவர்கள் கவனத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

சென்னை, திருச்சியில் ஓமைக்ரான் பரவியுள்ளதாக பரவும் செய்தி தவறானது. தமிழகத்திற்குள் ஓமைக்ரான் இன்னும் வரவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும், ஓமைக்ரான் வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்பட  6 அரசு மருத்துவமனை களில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.