சிங்கம் 3 வெற்றி: ஹரிக்கு கார் பரிசளித்தார் சூர்யா!

Must read

சென்னை,

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்த சிங்கம் 3 படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸானது.

சிங்கம் 3 படம் வெளியான ஆறு நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே  ஜனவரி 26-ம் தேதி வெளியாவதாக இருந்த சூர்யாவின் சிங்கம் 3, ஜல்லிக்கட்டு விவகாரம் காரணமாக வெளியிடுவதை தள்ளி வைத்தனர் பட தயாரிப்பாளர்.  அடுத்து மேலும் இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட சிங்கம் 3 படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வருகிறது.

சிங்கம் 3 வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து படத்தின் நாயகன் சூர்யா, டைரக்டர் ஹரிக்கு டோயட்டோ பார்சுனர் கார் ஒன்றை பரிசளித்து உள்ளார்.

 

More articles

Latest article