சசிகலாவுக்கு ஜெயில்: திரையுலகினர் சொல்வது என்ன?

Must read

சென்னை,

சிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதுகுறித்து  தமிழக திரையுலகினர்  தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்….

கமல்ஹாசன்:  பழைய பாட்டுத்தான் இருந்தாலும்…

தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..

எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..

நடிகர் அரவிந்தசாமி: தற்போதைய முதல்வர் தனது அலுவலகத்திற்கு சென்று அவரது பணிகளை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அவர் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

ஆர்.பார்த்திபன்: சட்டம் என் கையில்” என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல், சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்.

நடிகர் பிரகாஷ்ராஜ்: இது முடிவல்ல, நாட்டை தூய்மைப்படுத்தும் ஆரம்பம்தான். இன்னும் நாம் செல்ல வேண்டும்

நடிகை கவுதமி: சசிகலா, ஜெயலலிதாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்.

வரலட்சுமி சரத்குமார்: ஒட்டு மொத்த தமிழகமும் சந்தோஷமாக உள்ளது.

பாடலாசிரியை தாமரை: அம்மாவின் மரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

காயத்ரி ரகுராம்: கடவுள் உண்மையிலேயே இருக்கின்றார்.

ஆதிக் ரவிச்சந்திரன்: ஓபிஎஸ் என்றால் ஓ.பன்னீர்செல்வம் என்று நினைச்சயாடா? ஆபரேசன் சசிகலாடா…..

மியூசிக் டைரக்டர் சீன்ரோல்டான்: ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். கை விடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான்

இயக்குனர் சீனுராமசாமி: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

பாலசரவணன்: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்…மீண்டும் தர்மம் வெல்லும்…இன்று தர்மம் வென்றது..கொடியவர்கள் தண்டிக்கபட்டார்கள்…நன்றி இறைவா…

 

More articles

Latest article