10லட்சம் நிவாரணம்: 'சிமி' பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் குடும்பத்துக்கு..

Must read

போபால்,
சிமி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சிறைத்துறை போலீசார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக மத்தியபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
சிமி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிவாரணம் -முதல்வர் அறிவிப்பு
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு நாடெங்கும் உள்ள பல்வேறு மத்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
sivaraj-savukan1
மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள மத்திய சிறையில் 8 சிமி தீவிரவாதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் 8 பேரும் தனி அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்று  அதிகாலை 2 – 3 மணிக்குள் 8 பயங்கரவாதிகளும் சிறை காவலாளி ராமசங்கர் யாதவை, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.  ஜெயிலில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையை சிறைச் சாலை சுற்றுச் சுவர் கம்பிகள் மீது போட்டு அதன் மீது ஏறி 8 சிமி யங்கரவாதிகளும்  தப்பியுள்ளனர்.
பின்னர் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது அவர்கள் அனைவரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட னர்.
இந்நிலையில், சிமி யங்கரவாதிகளால்  கொல்லப்பட்ட சிறை காவலாளியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவரது சகோதரர் ஒருவர் கூறுகையில், “சிமி யங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் என்னுடைய சகோதரர் கொல்லப்பட்டார் என்ற தகவல்  தெரியவந்தது. அவர் மிகவும் புத்திசாலி” என்றார்.

More articles

Latest article