ஜி.வி.பிரகாஷ் பதிவிட்ட புகைப்படம்
ஜி.வி.பிரகாஷ் பதிவிட்ட புகைப்படம்

நடிகர் சிம்பு சில வருடங்களாகவே பல சர்ச்சைகள் அவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன அதில் முக்கியமானது பீப் சாங் தான். இந்த பிரச்சனையிலிருந்து எப்படியோ வெளியே வந்த இவர் அதன் பின் சிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டார்.
இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சிம்பு, இவர் தனது சமூக வலைதளமான ட்விட்டரில் நேற்று ஒரு பதிவை பதிவேற்றினார் அதில் அவர் கூறியதாவது :-
படு தொல்வியடைந்த ஒரு படத்தை அவர்கள் மெகா ஹிட் என்று கூறிக்கொள்கின்றனர், அந்த வகையில் அச்சம் என்பது மடமையடா பொருத்தவரை நாங்கள் சந்தோஷமாக உள்ளோம், இவர்களை போல் பொய்யாக கூறாமல்” என்று அந்த பதிவில் இருந்தது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவரின் இந்த பதிவுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் “கடவுள் இருக்கான் குமாரு” படத்தின் ஒரு போஸ்டரை தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் அதில் பிளாக் பஸ்டர் ஹிட் என்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ சிம்பு சொன்னது ஜி.வியின் கடவுள் இருக்கான் குமார் படத்தை தானா….? ஐய்யய்யோ நாங்க சொல்லலங்க…