பிரபல திரைப்பட இயக்குநர் மறைவு

Must read

 
ksubash-director
பிரபல திரைப்பட இயக்குநர் சுபாஷ் காலமானார். பழம்பெரும் இயக்குநர் கிருஷ்ணன் (கிருஷ்ணன் – பஞ்சு இரட்டையர்) அவர்களின் மகனான இவர்  கலியுகம், உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா, நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சபாஷ் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இந்தி திரையுலகிலும் வெற்றிகரமான திரைக்கதாசிரியராகத் திகழ்ந்தவர் இவர்.
உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமான சுபாஷூக்கு  வயது 57.  அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article