‘நதிகளிலே நீராடும் சூரியன்’ : வைரலாகும் சிம்புவின் விமானத்தில் பயணிக்கும் ஃபோட்டோ….!

Must read

சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் நதிகளிலே நீராடும் சூரியன். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கெளதம் மேனன் இயக்கவுள்ளார்.

இரண்டாவது முறையாக சிம்பு, கெளதம் கூட்டணிக்கு இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் மறுபடியும் திரைத்துறை சம்பந்தமான பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

அதே போல் சிம்புவிற்கு தாயாக நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மூன்றாம்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகர் சிம்பு மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.

 

More articles

Latest article