திருமணத்துக்கும், கமல்ஹாசனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். முதலில் வாணி கணபதியை திருமணம் செய்து பத்தாண்டுகளில் விவாகரத்து செய்தார். பிறகு சரிகாவுடன் சேர்ந்து வாழ்ந்து இரு குழந்தைகள் பெற்ற பிறகு அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு விவாகரத்து. இந்த நிலையில்தான் கவுதமியுடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆனால் சோக முடிவாக 13 வருடங்களில் இந் பந்தம் முறிந்துவிட்டது.
1
கடந்த 2009ம் வருடம், இந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கமல் பேட்டி அளித்த கமல், “திருமணம்” குறித்து மிக துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்டார்.
அந்த பேட்டியில் கமல் பேசியதில் இருந்து:
“திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன. எனவே திருமணங்கள் தேவையில்லை. குடும்ப அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது பலமானது. ஆனால் அதற்காக திருமணம் அவசியம் என்று சொல்ல முடியாது.
வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம். நான் செய்து கொண்ட ஒரு சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம்.
இரு குழந்தைகள் குழந்தைகள் பெற்றுக்கொண்ட பிறகு சரிகாவை திருமணம் செய்து கொண்டேன். இதற்கு காரணம் ஓட்டல்களில் அறை எடுக்கும்போது சிரமம் ஏற்பட்டதால்தான். அதாவது,  ‘இந்தக் குழந்தைகளின் தாயார் இவர்’ என்று சொன்னால் அதுமட்டும் போதாது. எனது மனைவி யார்? என்றும் கேட்டகிறார்கள். ஆகவேதான்  சரிகாவை துணைவியாக ஆக்கிக் கொண்டேன்” என்றார் கமல்.
2
இதற்கிடையே கமல் – சரிகா ஜோடி, முறையாக விவாகரத்து பெற்றது. அதன் பிறகு ஒரு இந்தி பத்திரிகைக்கு பேட்டி அளித்த சரிகா, “திருமணம் என்பது அழகான உறவு” என்றார்.
“சரிகாவின் இந்த கருத்து குறித்து உங்கள் கருத்து என்ன” என்று கமலிடம் கேட்டபோது, “ அந்த கருத்தை நான் ஏற்கவில்லை. ஏற்கவில்லை. திருமணம் என்பது ஓல்டு பேஷன் (பழைய கலாசாரம்). ஒருவரை வலுக்கட்டாயமாக மற்றொருவருடன் தங்க வைப்பதற்கான சட்டப்படியான ஒப்பந்தம்தான் திருமணம். யார் மீதாவது உண்மையான காதல் இருந்தால் பேப்பரில் எழுதும் அங்கீகாரம் தேவையே இல்லை” என்றார் கமல்.
அப்போது கவுதமியோடு அவர் சேர்ந்து வாழ ஆரம்பிக்காத நிலை. மறுமணம் குறித்தும் அப்போது கமல் கூறினார்.
அதாவது, “மறுமணம் செய்துகொள்வீர்களா என்கிறார்கள். இப்போதைக்கு நான் ரொம்பவும் சந்தோஷமாகவும், சவுகர்யமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” என்று பதில் அளித்தார் கமல்.